வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

பதிவிலக்கம்: – NP/KN/KV/DS/VSSO/2016/23

தொலைபேசி இலக்கம்: – 021-2283080

2020 செயற்பாட்டறிக்கை

Vanni Association for Visually Handicapped,

Kilinochchi.

 

செயற்பாட்டறிக்கை 2020

  • 01.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய 30 பயனாளிகளுக்கு கிளிநொச்சி சத்தியசாயி சேவா நிலையத்தினரால் பொங்கல் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
  • 01.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் 30 பயனாளிகளுக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் சத்தியசாயி சேவா நிலையத்தினரால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
  • 10.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தால் 100 பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
  • 02.2020 வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய இராசையா ரகுபதிதாஸ் அவர்களுக்கு 25,000 ரூபா பெறுமதியான மோட்டார், மற்றும் நீர் இணைப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

10.02.2020-  வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய பொன்னன் யோகதாஸ் அவர்களுக்கு அவருடைய கண் மருந்து கொள்வனவிற்காக 2,120 ரூபா மருத்துவ உதவியாக வழங்கி வைக்கப்பட்டது.

13.02.2020. லண்டன் செல்லத்துரை இராஜேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தை சேர்ந்த 40 பயனாளிகளுக்கு உலருணவு மற்றும் குளிர்பானங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டதுடன், ம.உத்திரியமேரி கி.தயாகரன் ஆகிய இருவரது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டிற்காக மிதி வண்டிகள் இரண்டு வழங்கி வைக்கப்பட்டன.

13.02.2020 வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினூடாக பரிபூராநந்தம் ஜீலியன் சதாநந் அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் அமைந்திருக்கும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்து கல்விகற்கும் சிறுவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கிவைக்கப்பட்டது.

18.02.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஊடாக திரு பாலா அவர்களால் நிலோசன் ரசிதா  அவர்களுக்கு குளியலறை அமைப்பிற்காக ரூபா-46500 நிதியாக வழங்கிவைக்கப்பட்டது

18.02.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய திருச்செல்வம் தமிழினியன் அவர்களுக்கு ஆடு வளக்கும் வாழ்வாதார உதவிக்காக ரூபா- 35000 நிதியாக வழங்கிவைக்கப்பட்டது.

18.02.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய இராசையா ரகுபதிதாஸ் அவர்களுக்கு 4000 ரூபா பெறுமதியில் மூக்குக்கண்ணாடி அன்பளிப்பாக  வழங்கிவைக்கப்பட்டது.

20.02.2020- பாரிசில் வசிக்கும்  இராசையா மகேந்திரா அவர்களின் பிறந்த நாளினைமுன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளிகளாகிய பரசுராம் கோபிநாத், செல்லத்துரை கலைச்செல்வன் ஆகியோருக்கு மிதிவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

24.02.2020.- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய இராசலிங்கம் சிவகுமார் அவர்களுக்கு கோழிவளர்ப்பிற்காக  ரூபா 35000 வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

26.02.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய யோதிலிங்கம் புஸ்பராஜா  அவர்களுக்கு மருத்துவ உதவியாக  5000 ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

04.03.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய பெரியான் இராசதுரை  அவர்களுக்கு மருத்துவ உதவியாக  5000 ரூபா நிதியாக வழங்கி வைக்கப்பட்டது.

18.03.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய ப.றொசான்  அவர்களின் சாவுச்செலவுக்காக அவரது தாயாரிடம் 10000 ரூபா நிதியாக வழங்கி வைக்கப்பட்டது.

24.03.2020- வன்னி விழிப்புலனற்றோர்  சங்கத்தின் வடக்கு, கிழக்கை சேர்ந்த பயனாளிகள் 113 பேருக்கு லிபாரா பாதிப்புறு நிலையிலுள்ள மக்களுக்கான உதவிக் கொடுப்பனவு திட்டத்தின் கீழ் சனவரி பெப்ரவரி  மாதங்களிற்கான மாதாந்த 5000 ரூபா கொடுப்பனவு அவரவர் கணக்குகளில் வைப்பில் இடப்பட்டது.

16.04.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் வடக்கு, கிழக்கை சேர்ந்த பயனாளிகள் 113 பேருக்கு லிபாரா பாதிப்புறு நிலையிலுள்ள மக்களுக்கான உதவிக் கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மார்ச்  மாதத்திற்கான  5000 ரூபா கொடுப்பனவு அவரவர் கணக்குகளிலும் நேரடியாகவும்  வழங்கி வைக்கப்பட்டது.

20.04.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பிநர் சந்திரராசா விக்னேஸ்வரன் அவர்களுக்கு தோட்டம் செய்வதற்கான நீர் இறைக்கும் பொறி கொள்வனவிற்கு ரூபா 35000 நிதியாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

21.04.2020- பிரான்ஸ்சை சேர்ந்த  அமரர் பேசன் பராசக்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்க பச்சிலைப்பள்ளி, கரைச்சி பிரதேசங்களை  சேர்ந்த  20 பயனாளிகளுக்கு கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

22.04.2020- லிபாரா பௌண்டேசன் நிறுவனத்தின் நிதி பங்களிப்பில்  மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வன்னி விழிப்புலனற்றோர் சங்க பயனாளிகள் 200 பேருக்கு 2000ரூ பெறுமதியில் கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

23.04.2020- திரு. துரைச்சாமி செட்டியார் அவர்களின் 50000ரூ நிதி பங்களிப்பில்  கரைச்சி பிரதேசத்தை சேர்ந்த பயனாளிகள் 20 பேருக்கு கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

23.04.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய திருநாவுக்கரசு உருத்திரேஸ்வரன் அவர்களுக்கு வாழைத்தோட்டம் செய்வதற்கு ரூபா 35000 வாழ்வாதாரநிதியாக வழங்கப்பட்டது.

24.04.2020- புதிய வாழ்வு  நிறுவனத்தின் நிதி பங்களிப்பில்  புதுக்குடியிருப்பு, கரைதுரைபற்று, கரைச்சி, கண்டாவளை, பூநகரி பிரதேசங்களை சேர்ந்த பயனாளிகள் 200 பேருக்கு கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

24.04.2020- SUN rice foundation நிதி பங்களிப்பில்  புதுக்குடியிருப்பு கரைதுரைபற்று கரைச்சி கண்டாவளை பூநகரி பயனாளிகள் 135 பேருக்கு 1000ரூ பெறுமதியில் கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

24.04.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளிகளாகிய 113 பேருக்கு லிபாரா பாதிப்புறு நிலையிலுள்ள மக்களுக்கான உதவிக் கொடுப்பனவு திட்டத்தின் ஏப்ரல்  மாதத்திற்கான  5000 ரூபா கொடுப்பனவு அவரவர் கணக்குகளில் வைப்பில் இடப்பட்டது.

25.04.2020- கனடாவை சேர்ந்த  அமரர் பொன்னையா நல்லதம்பி அவர்களின் 31 ஆம் நினைவு நாளை முன்னிட்டு   அவர்களின் மகனான நல்லதம்பி சிற்சொரூபன் அவர்களால் பச்சிலைப்பள்ளி, கரைச்சி பிரதேசங்களை சேர்ந்த  வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளிகளாகிய 50 பேருக்கு கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

26.04.2020- கொரக்கொட்டேல் நிறுவன நிதி பங்களிப்பில்  கற்குவாறி மாங்குளப்பகுதியைச் சேர்ந்த  வறுமைக்கோட்டுக்குட்பட்டு வாழும் மக்கள் 40 பேருக்கு 80000ரூ பெறுமதியில் கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

30.04.2020- ஹறித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் கரைச்சி பிரதேச வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் 38 உறுப்பினர்களுக்கு  கொரோணா இடர்கால 1000ரூ பெறுமதியான உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

02.05.2020-ஆம் நாள் யாழ் சத்தியசாய் சேவா நிலையத்தினரால் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த   வன்னி விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள்   32 பேருக்கு 2500ரூ பெறுமதியான கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

03.05.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய செல்லத்துரை   கலைச்செல்வன் அவர்களுக்கு மோட்டார் மற்றும் இணைப்புக்கருவிகளுக்காக  35000 ரூபா நிதி அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.

04.05.2020- ஹறித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் கண்டாவளை  பிரதேச வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் 32 பயனாளிகளுக்கு 1000ரூ பெறுமதியான கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

05.05-2020- ஹறித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் பூநகரி  பிரதேச வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் 10 உறுப்பினர்களுக்கு  1000ரூ பெறுமதியான கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

07.05.2020- ஹறித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பச்சிலைப்பள்ளி  பிரதேச 8 உறுப்பினர்களுக்கு 1000ரூ பெறுமதியான கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

15.05.2020- கிளிநொச்சி  சத்திய சாயி சேவாநிலையத்தினரால் கரைச்சி,புதுக்குடியிருப்பு  பிரதேசங்களை சேர்ந்த  வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் 50 உறுப்பினர்களுக்கு  200ரூ பெறுமதியான கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

22.05.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய திருமதி ரகுபதிதாஸ் டயானி அவர்களுக்கு மருத்துவ உதவியாக 5000 ரூபா நிதியாக வழங்கி வைக்கப்பட்டது.

02.06.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய பொன்னன் யோகதாஸ் அவர்களுக்கு கண் மருந்து 4240 ரூபா பெறுமதியில் வழங்கி வை்க்கப்பட்டது.

03.06.2020- விபத்தொன்றில் காயமடைந்த வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் மட்டக்களப்பைச்சேர்ந்த பயனாளியாகிய சண்முகம் கிருஸ்ணபிள்ளை அவர்களுக்கு மருத்துவ உதவியாக 5000 ரூபா நிதியாக வழங்கி வைக்கப்பட்டது.

03.06.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய க.கனகரூபன் அவர்களுக்கு தோட்டப்பயிர் செய்வதற்கான 35000ரூ வாழ்வாதார நிதியாக வழங்கப்பட்டது.

03.06.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளிகளாகிய 113 பேருக்கு லிபாரா பாதிப்புறு நிலையிலுள்ள மக்களுக்கான உதவிக் கொடுப்பனவு திட்டத்தின் மே மாதத்திற்கான  5000 ரூபா கொடுப்பனவு அவரவர் கணக்குகளில் வைப்பில் இடப்பட்டது.

08.06.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினால்  தரம் 1இல் கல்வி கற்கும் மாணவர்கள் 9 பேருக்கு   ரூபா 3000 வீதம் அவரவர் சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டது

09.06.2020- ஆம் நாள்  கனடாவில் உள்ள அகவம் அமைப்பினரால்  யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த   32 பேருக்கு 5000ரூ பெறுமதியில் கொரோணா இடர்கால உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

10.06.2020- சுவீசில் உள்ள செல்வன்  புஸ்பரகுநாதன் யாதேஸ் அவர்களால் வன்னி விழிப்புலனற்றோர் சங்க தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் 04 பேருக்கும் தரம் 4 இல் கல்வி கற்கும் ஒருவருக்குமாக மொத்தம் 5 மாணவர்களுக்கு 3000 வீதம் அவரவர் சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டது.

13.06.2020- சுவீசில் வசிக்கும் செல்வி புஸ்பரகுநாதன் விஷால் அவர்களால் வன்னி விழிப்புலனற்றோர் சங்க தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் 5 பேருக்கு   ரூபா 3000 வீதம் அவரவர் சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டது.

21.06.2020- முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த  20 உறுப்பினர்களுக்கு கொழும்பில் வசித்து வரும் நன்கொடையாளராகிய விக்னேஸ்வரன் கஜயமுகவாசுகி அவர்களின் 18 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1200ரூ பெறுமதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

23.06.2020- பிரான்சில்  வசிக்கும் நன்கொடையாளரான செல்வன் ரட்ணாகரன் சதுர்சன் ,மாதுளன்   அவர்களால் வன்னி விழிப்புலனற்றோர் சங்க தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் 2 பேருக்கும் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் நான்கு பேருக்குமாக 06 மாணவர்களுக்கு    ரூபா 3000 வீதம் அவரவர் சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டது.

29.06.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க பயனாளியாகிய இராசகோபால் இராசநந்தினிக்கு மருத்துவ உதவியாக 5000 ரூபா நிதியாக வழங்கி வைக்கப்பட்டது.

29.06.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் வடக்கு, கிழக்கு பயனாளிகளாகிய 113 பேருக்கு லிபாரா பாதிப்புறு நிலையிலுள்ள மக்களுக்கான உதவிக் கொடுப்பனவு திட்டத்தின் யூன்  மாதத்திற்கான  5000 ரூபா கொடுப்பனவு அவரவர் கணக்குகளில் வைப்பில் இடப்பட்டது.

02.07.2020- இலண்டனை சேர்ந்த கனகசபை மங்கையற்கரசி அவர்களால் கண்டாவளை பிரதேசத்தை சேர்ந்த வன்னி விழிப்புலனற்றோர் சங்க பயனாளியாகிய  சி.தேவகி   அவர்களுக்கு 40000 ரூ நிதியாக அவருடைய வீடு திருத்தம் செய்வதற்காக வழங்கி வைக்கப்பட்டது.

04.07.2020- பிரான்சில்  வசிக்கும் நன்கொடையாளரான சிவகுமார் தேவகனிஅவர்களால் வன்னி விழிப்புலனற்றோர் சங்க கண்டாவளை பிரதேச பயனாளிகளாகிய  உ.எழில்வர்ணன் சி.தேவகி சங்கானை பிரதேசத்தை சேர்ந்த ம.குணரத்தினம் ஆகியோருக்கு நீர் இறைக்கும் மோட்டார்,இணைகருவிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

13.07.2020- கனடாவில்   உள்ள  தையிட்டி மக்கள் ஒன்றியத்தினால்   வன்னி விழிப்புலனற்றோர் சங்க புதுக்குடியிருப்பு பிரதேச பயனாளியாகிய  இராசலிங்கம் . சிவகுமார் அவர்களுக்கு 100000 ரூபா பெறுமதியில் குழாய் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது.

04.07.2020- சுவீசில் வசிக்கும் நன்கொடையாளரான திரு.சின்னத்தம்பி வீரசிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிற்சொரூபன் புனிதா அவர்களால் வன்னி விழிப்புலனற்றோர் சங்க வவுனியா பிரதேச  பயனாளியாகிய  ஸ்ரீ.யோகராஜா யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஸ்ரீ.ஜெயராஜா  ஆகியோருக்கு நீர் இறைக்கும் மோட்டார் மற்றும் இணைகருவிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன

13.07.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கரைச்சி பிரதேச பயனாளியாகிய  இ.தங்கேஸ்வரி  அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக பழங்கள் விற்பனை செய்யும் கடை அமைப்பதற்கு 35000  ரூபா நிதியாக வழங்கி வைக்கப்பட்டது.

16.07.2020- மதிப்புக்குரிய துரைச்சாமி செட்டியார் அவர்களால்     வன்னி விழிப்புலனற்றோர் சங்க புதுக்குடியிருப்பு பிரதேச பயனாளியாகிய  சோ.சுதர்சன் அவர்களுக்கு  குழாய் கிணறு 116950 ரூபா பெறுமதியில் அமைத்து கொடுக்கப்பட்டது.

18.07.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கரைச்சி பிரதேச பயனாளியாகிய  அ.விஜிதா   அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆடு வளர்ப்பதற்கு 35000  ரூ நிதியாக வழங்கி வைக்கப்பட்டது.

22.07.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.சாதாரண தரத்தில் தேர்ச்சியடைந்த 06 மாணவர்களுக்கு எமது 07 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது 5000 ரூபா வீதம் அவரவர் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதுடன், இந்நிகழ்வில் கலந்துகொண்ட 45 உறுப்பினர்களுக்கு ராமு சாந்தரூபன்,நிருபன் ஆகியோரால் 1000 ரூபா நிதியாக வழங்கப்பட்டது. அத்துடன் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினரால் உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

24.07.2020-வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் வவுனியா வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பயனாளியாகிய தர்மபாலன்  அவர்களுக்கு மூக்கு கண்ணாடி 6300ரூ பெறுமதியில் அன்பளிப்பாக  வழங்கிவைக்கப்பட்டது.

31.07.2020 -வன்னி விழிப்புலனற்றோர் சங்க கண்டாவளை பிரதேச பயனாளியாகிய  பொன்னுத்துரை சதாசிவம்   அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழி குஞ்சு பொறிக்கும் இயந்திரம் 25000 ரூ பெறுமதியில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

31.07.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் சங்கானை பிரதேச  பயனாளியாகிய சபாபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு நீர் இறைக்கும் மோட்டார் மற்றும் இணைகருவிகளுக்காக 35000ரூ நிதியாக வழங்கி வைக்கப்பட்டது.

04.08.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க ஒட்டுசுட்டான், துணுக்காய் ,வவுனியா    பிரதேசங்களைச்  சேர்ந்த பயனாளிகள் 07 பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் லண்டன் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர் ஒருவரினால் வழங்கப்பட்ட நிதி உதவியில் 5179 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

 21.08.2020- புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 12 பயனாளிகளுக்கு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினரால்  2000ரூ பெறுமதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

22.08.2020- பளை பிரதேசத்தைச் சேர்ந்த 7 பயனாளிகளுக்கு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினரால் 2000ரூ பெறுமதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

24.08.2020- பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 10 பயனாளிகளுக்கு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினரால்  2000ரூ பெறுமதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

25.08.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கரைதுரைபற்று  பிரதேசத்தைச் சேர்ந்த பயனாளியாகிய  மகிமராசா தர்மவதி அவர்களுக்கு இலண்டனை சேர்ந்த ந.பிரதீபன் அவர்கள் 60000ரூ நிதி உறுதுணை கோழி வளர்க்கும்  வாழ்வாதார முயற்சிக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், 5000ரூ பெறுமதியில் உலர் உணவுப் பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.

07.09.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச பயனாளியாகிய திரு.இராசலிங்கம் சிவகுமார் அவர்களுக்கு மருத்துவ உதவியாக 3000 ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

13.09.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கரைச்சி, கண்டாவளை, புதுக்குடியிருப்பு, பிரதேசங்களைச் சேர்ந்த 25 உறுப்பினர்களுக்கு திரு.சின்னச்சுவாமி அவர்களின் ஒராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் மகனான சதீஸ் பாவு அவர்களினால் 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதியும் நண்பகல் உணவும் வழங்கி வைக்கப்பட்டது.

15.09.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் கரைச்சி பிரதேசத்தைச் சேர்ந்த  பயனாளியாகிய கனகலிங்கம் யாழினி   அவர்களுக்கு மூக்கு கண்ணாடி 7000ரூ பெறுமதியில் அன்பளிப்பாக  வழங்கி வைக்கப்பட்டது.

17.09.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் கரைச்சி, புதுக்குடியிருப்பு, கண்டாவளை  பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளிகளாகிய குணசிங்கம் புஸ்பமாலா, பாலரஞ்சன் பத்மதரன், குழந்தைவேல் தயாபரன், ஸ்ரீபஞ்சாட்சரம் சிறிதரன், எமிலியாம்பிள்ளை வடிவாம்பிகை   என்பவர்களுக்கு  மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பாக  வழங்கி வைக்கப்பட்டன.

19.09.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க புதுக்குடியிருப்பு   பிரதேசத்தைச் சேர்ந்த பயனாளியாகிய  லோகேஸ்வரன் கேதீஸ்வரன்  அவர்களுக்கு புலம் பெயர்ந்த உறவுகளான அவுஸ்ரேலியாவை சேர்ந்த ராணி, அஞ்சனா, மற்றும் லண்டனைச் சேர்ந்த ந.பிரதீபன் ஆகியோரின் நிதி அன்பளிப்பில் வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பிற்கு  100000 ரூ நிதியாக அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.

20.09.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கரைச்சி, கண்டாவளை  பிரதேசங்களைச் சேர்ந்த 25 உறுப்பினர்களுக்கு கிளிநொச்சி சத்தியசாயி சேவா நிலையத்தினரால் 2500ரூ பெறுமதியில் உலர் உணவுப்பொதிகளும் புடைவைகளும்  வழங்கி வைக்கப்பட்டன.

22.09.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க புதுக்குடியிருப்பு   பிரதேசத்தைச்  சேர்ந்த பயனாளியாகிய தர்மலிங்கம்  மோகணராணி அவர்களுக்கு யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலியா நாட்டில் வாழும் புலம் பெயர்ந்த உறவுகளான சத்வீகா,ஆதனா,அபினா,அபினீற் ஆகியோர் வழங்கிய நாற்பதாயிரம் நிதி அன்பளிப்பில் 20 கோழி, கோழி கூடு, தீவணம், தண்ணீர் மற்றும் தீவணம் வைக்கும்  கொள்கலன் என்பன   அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

23.09.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க பூநகரி  பிரதேசத்தைச்  சேர்ந்த பயனாளியாகிய பாலமயூரன் நவாநந்நிதினி அவர்களுக்கு யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்த உறவான  யாழ்ப்பாணம் தாவளை வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் கனடா நாட்டில் ரொரொண்டோவை வாழ்விடமாகவும் கொண்ட தமிழ் உறவான அமரர் திருமதி இராஜலெட்சுமி இராஜேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்கிய ஐம்பதாயிரம் 50000 ரூபா பெறுமதியிலான பசுமாடு ஒன்று   அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

24.09.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க பச்சிலைப்பள்ளி    பிரதேசத்தைச்  சேர்ந்த பயனாளியாகிய நித்தியானந்தம் வசந்தினி அவர்களுக்கு யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலியா நாட்டில் வாழும் புலம் பெயர்ந்த உறவான  யாழ்ப்பாணம் தாவளை வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் கனடா நாட்டில் ரொரொண்டோவை வாழ்விடமாகவும் கொண்ட தமிழ் உறவான அமரர் திருமதி இராஜலெட்சுமி இராஜேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்கிய ஐம்பதாயிரம் ரூபா நிதி அன்பளிப்பில் கோழிகள், கோழி கூடு, தீவணம், தண்ணீர் மற்றும் தீவணம் வைக்கும்  கொள்கலன் என்பன   அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

02.10.2020- இலண்டனைச் சேர்ந்த திரு ந.பிரதீபன் அவர்களால்   வன்னி விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினராகிய பே.ஞானகுமார்  அவர்களுக்கு  100000ரூ பெறுமதியில் குழாய் கிணறு அமைத்துக்கொடுக்கப்பட்டது.

02.10.2020- அன்று வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பயனாளியாகிய சி.தேவகி  அவர்களுக்கு மருத்துவ உதவியாக 2000ரூ நிதியாக வழங்கி வைக்கப்பட்டது

20.010.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க பச்சிலைப்பள்ளி, புதுக்குடியிருப்பு, கரைச்சி, வவுனியா    பிரதேசங்களை சேர்ந்த பயனாளிகள் ஆறு பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிட்னி அவுஸ்ரேலியா நாட்டில் வாழ்ந்து  இறைபதம் அடைந்த திரு.சுப்ரமணியம் ஜெயசீலன்அவர்களின் 31 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் அன்பரால் 5000*06=30000ரூ பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டது.

21.10.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க பச்சிலைப்பள்ளி, புதுக்குடியிருப்பு, கரைச்சி, கண்டாவளை     பிரதேசங்களை சேர்ந்த பெண் தலைமைத்துவ பயனாளிகள் 10 பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் கனடா நாட்டில் வாழ்ந்து  வரும் எஸ் சாயித்தியன் அவர்களின்  10 ஆவது பிறந்த தினத்தை  முன்னிட்டு அவரின் குடும்பத்தினரால் 3000*10=30000ரூ  பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

26.10.2020- அன்று வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் கரைச்சி பிரதேசத்தை சேர்ந்த பயனாளியாகிய திரு. மத்தியூஸ் ஞானதேவன் அவர்களுக்கு மருத்துவ உதவியாக 5000 ரூ நிதியாக வழங்கி வைக்கப்பட்டது.

27.10.2020- அன்று வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த பயனாளியாகிய திரு ந.நவீனன் அவர்களுக்கு மருத்துவ உதவியாக 5000ரூ நிதியாக வழங்கி வைக்கப்பட்டது.

29.10.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க பச்சிலைப்பள்ளி, புதுக்குடியிருப்பு, கரைச்சி, யாழ்ப்பாணம், ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு பிரதேசங்களைச்  சேர்ந்த பயனாளிகள் 10 பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த திரு. நடராஜா சண்முகவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் குடும்பத்தினரால் 500*10=50000ரூ பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டது.

04.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க ஒட்டுசுட்டான், துணுக்காய் ,வவுனியா    பிரதேசங்களைச்  சேர்ந்த பயனாளிகள் 07 பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் லண்டன் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர் ஒருவரினால் வழங்கப்பட்ட நிதி உதவியில் 5000*07=35000ரூ பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

06.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கரைச்சி, கண்டாவளை     பிரதேசங்களைச்  சேர்ந்த பயனாளிகள் 05 பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் கனடா நாட்டில் வாழும் செல்வி ஜெயந்தன் சகீரா அவர்களின் தொட்டிலாட்டு விழாவினை முன்னிட்டு அவர்களின் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியில் 25000 ரூபாவில்   உலர் உணவு பொருட்கள் 5000 ரூபா  பெறுமதியில்  வழங்கி வைக்கப்பட்டன.

06.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் மட்டக்களப்பைச்சேர்ந்த  பயனாளியாகிய  க.லவக்குமாரன், புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த  கு.மணிசேகரம் ,சு.சசிக்குமார்   ஆகியோருக்கு வாழ்வாதார உதவியாக தலா 50000  ரூபா  வீதம் அவுஸ்ரேலியாலைச் சேர்ந்த யோகேஸ்வரன் சிவக்கொழுந்து அவர்களால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

09.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் மன்னாரைச்  சேர்ந்த  பயனாளியாகிய  ஜீ.கேதீஸ்வரன் அவர்களுக்கு, கணிணித் தொகுதி ஒன்று வாழ்வாதார உதவியாக 64000  ரூ பெறுமதியில் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த யோகேஸ்வரன் சிவக்கொழுந்து அவர்களால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

12.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க பச்சிலைப்பள்ளி, புதுக்குடியிருப்பு, கரைச்சி, கண்டாவளை, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு பிரதேசங்களைச்  சேர்ந்த பயனாளிகள் 50 பேருக்கு  இலண்டனை சேர்ந்த துசிந்தன் சின்னையா அவர்களால் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு 3000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

19.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க மன்னாரைச்  சேர்ந்த  பயனாளியாகிய  ஜீ.ஜீவிதா அவர்களுக்கு, லண்டனைச் சேர்ந்த நன்கொடையாளரான ந. பிரதீபன் அவர்களால் வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பிற்கு தலா 60000  ரூபா அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

21.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் மன்னாரைச்  சேர்ந்த  பயனாளியாகிய  ச.பிறிற்றி  அவர்களுக்கு, யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க ஏற்பாட்டில் வாழ்வாதாரத்திற்காக மன்னார் வண்ணான் குளம் அடம்பனைச் சேர்ந்த திரு குமாரசாமி நவநீதன் குடும்பத்தினரால் நல்லின சினையுடன் கூடிய பசு மாடு, கன்றும்  .   அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

21.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க வவுனியாவைச்   சேர்ந்த  பயனாளியாகிய  ந.புலந்திரன்  அவர்களுக்கு, சுவீசைச் சேர்ந்த சிற்சொரூபன் ஜீவகுமாரி அவர்கள் வாழ்வாதாரத்திற்காக 50000 ரூபாவும் சின்னையா யோகராசா அவர்களால் வழங்கப்பட்ட நிதி உதவியில் 10000 ரூபாவுமாக  60000 ரூபா பெறுமதியில் கோழிக்கூடு மற்றும் கோழிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

22.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த      பயனாளியாகிய செ. செல்வகுமார்   அவர்களுக்கு, சுவீசைச் சேர்ந்த திரு.சின்னையா யோகராசா அவர்களால் வாழ்வாதாரத்திற்காக 50000 ரூபா பெறுமதியில் ஆடுகள், குட்டிகள்  அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

23.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த      பயனாளியாகிய இ.ரகுபதிதாஸ்  அவர்களுக்கு, சுவீசைச் சேர்ந்த திரு.சின்னையா யோகராசா அவர்களால் வாழ்வாதாரத்திற்காக 25000 ரூபா பெறுமதியில் கோழிக்குஞ்சு பொரிக்கும் கருவி ஒன்று   அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

24.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேசங்களைச்  சேர்ந்த பயனாளிகள் 10 பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர் ஒருவரினால் வழங்கப்பட்ட 50000 ரூபா நிதி உதவியில் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

28.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கண்டாவளை, புதுக்குடியிருப்பு பிரதேசங்களைச்   சேர்ந்த பயனாளிகள் 10 பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் லண்டன் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் திரு.சேயோன் தம்பதிகளின் புதல்வி செல்வி இந்துஜா அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்ட 50000 ரூபா நிதி உதவியில் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

04.11.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கரைச்சி, கண்டாவளை பிரதேசங்களைச்   சேர்ந்த பயனாளிகள் 10 பேருக்கு  யோ. புரட்சி அவர்களின் ஏற்பாட்டில் ஏர் நிலம் கவிஞர் து. திலக் அவர்களினால் வழங்கி வைக்கப்ட்ட 21000 ரூபா நிதி உதவியில்  2000ரூ பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டது.

05.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க மன்னார் மாவட்டத்தைச்   சேர்ந்த பயனாளிகள் 10 பேருக்கு  நம் கடமை அமைப்பின்  ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர் ஒருவரினால் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

07.12.2020-வன்னி விழிப்புலனற்றோர் சங்க கரைச்சி, கண்டாவளை பிரதேசங்களைச்   சேர்ந்த பயனாளிகள் 10 பேருக்கு  யோ. புரட்சி அவர்களின் ஏற்பாட்டில் இலண்டனைச் சேர்ந்த  திருமதி. தி. கிருஸ்ணவேணி அவர்கள் தனது அமரத்துவம் அடைந்த தந்தையாரின் நினைவாக  வழங்கி வைத்த 21000 ரூபா நிதி உதவியில்  2000 ரூ பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

08.12.2020-வன்னி விழிப்புலனற்றோர் சங்க பூநகரி பிரதேசத்தைச்    சேர்ந்த பயனாளிகள் 10 பேருக்கு  நம் கடமை அமைப்பின்  ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களால் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன

09.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச்   சேர்ந்த பயனாளிகள் 10 பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டு கிழக்கு சித்தங்கேணியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் குணரத்தினம் அவர்களின் நினைவு தினத்தினை  முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்ட 50000 ரூபா நிதி உதவியில் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

10.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க மன்னார்  மாவட்டத்தைச்    சேர்ந்த பயனாளிகள் 10 பேருக்கு  கனடா நாட்டில் இயங்கும் நம் கடமை அமைப்பின்  ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களது 5000 ரூபா  பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

12.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் புலமைத்தேர்வில் தேர்ச்சியடைந்த மற்றும் தேர்வில் தோற்றிய மாணவர்களுக்கான மதிப்பளிப்பு, பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது. இவர்களுக்கான கற்றல் பொருட்களை சமூகசெயற்பாட்டாளர் திரு வி.பிரேம்குமார் அவர்களின் ஒழுங்கமைப்பில் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இலண்டனை சேர்ந்த உறவான ந.பிரதீபன் அவர்களின் நிதியேற்பாட்டில் புலமைத்தேர்வில் தேர்ச்சியடைந்த 5 மாணவர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் 5000 ரூபா வீதம் வைப்பிலிடப்பட்டது.அத்துடன் இன்றைய நாள் நிகழ்விற்கான உணவு, சிற்றுண்டி ஏற்பாடுகள், மற்றும் 12  உறுப்பினர்களுக்கு 2073 ரூபாபெறுமதியிலான  உலர் உணவுப் பொதிகள் என்பவற்றை பிரான்சைச்சேர்ந்த ரதீசன் சதுசன் அவர்கள் தனது பிறந்தநாளினை முன்னிட்டு வழங்கிவைத்தார்.

13.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கண்டாவளை, கரைச்சி பிரதேசங்களைச்   சேர்ந்த பயனாளிகள் 11 பேருக்கு  லண்டனில் வாழ்ந்து வரும் நவரட்ணம் அவர்களின் நிதி அணுசரணையில் பல்கலைக்கழக மாணவன் அஜந்தன்  அவர்களின் ஏற்பாட்டில் இயக்குனர் சபை உறுப்பினர் ஆனந்தராசா ஊடாக 1500ரூ பெறுமதியில் உலருணவு பொருட்கள்  மற்றும் புடைவைகள் வழங்கி வைக்கப்பட்டன.

14.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கண்டாவளை கரைச்சி  பிரதேசங்களைச்   சேர்ந்த பயனாளிகள் 11 பேருக்கு  புலம் பெயர்ந்து  வாழ்ந்து வரும் அன்பர் ஒருவரின்  நிதி அணுசரணையில் பல்கலைக்கழக மாணவன் அஜந்தன்  அவர்களின் ஏற்பாட்டில் இயக்குனர் சபை உறுப்பினர் ஆனந்தராசா ஊடாக 1500ரூ பெறுமதியில் உலருணவு, புடைவைகள் வழங்கி வைக்கப்பட்டன

15.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கிட்ணபிள்ளை சிறிகரன்    அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலியா நாட்டில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் செல்வன் அகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் வழங்கி வைக்கப்பட்ட ரூபா 65000 நிதி உதவியில் இவரிற்கு நல்லின பால்மாடு மற்றும் கன்றும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

16.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச்   சேர்ந்த பயனாளிகளின் பிள்ளைகள் 70 பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஜேர்மனி பாட்பிரிச்சால் நகரில் உள்ள நல்லுள்ளம் கொண்ட தமிழ் உறவுகளின் 140,000 ரூபா நிதி உறுதுணையில் இரண்டு கட்டமாக சீருடை துணி மற்றும் புத்தகப்பை  வழங்கும் செயற்பாட்டில் முதல் கட்டமாக இன்றைய நாள் 33 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இன்றைய நாள் இலண்டனைச்சேர்ந்த றஞ்சனகுமார் றஞ்சிதமலர் அவர்களின் நிதி உறுதுணையில் அவருடைய பேத்தி காந்தரூபன் சாகித்தியா அவர்களின் முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு வழங்கிவைக்கப்பட்ட 50000 ரூபா நிதி உதவியில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச்   சேர்ந்த பயனாளிகளின் பிள்ளைகள் 70 பேருக்கு இரண்டு கட்டமாக கற்றல் உபகரணங்கள்   வழங்கும் செயற்பாட்டில் முதல் கட்டமாக இன்றைய தினம் 33 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

17.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச்   சேர்ந்த பயனாளிகளின் பிள்ளைகள் 70 பேருக்கு  யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஜேர்மனி பாட்பிரிச்சால் நகரில் உள்ள நல்லுள்ளம் கொண்ட தமிழ் உறவுகளின் 140,000 ரூபா நிதி அணுசரணையில் இரண்டு கட்டமாக சீருடை துணி மற்றும் புத்தகப்பை  வழங்கும் செயற்பாட்டில் இரண்டாம் கட்டமாக இன்றைய நாள் 37 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் இன்றைய தினம் இலண்டனில் புலம் பெயர்ந்து வாழும் றஞ்சனகுமார் றஞ்சிதமலர் அவர்களின் நிதி உறுதுணையில் அவருடைய பேத்தி காந்தரூபன் சாகித்தியா அவர்களின் முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட 50000 ரூபா நிதி உதவியில் கற்றல் உபகரணங்கள்   வழங்கும் செயற்பாட்டில் இரண்டாம்  கட்டமாக இன்றைய நாள் முல்லைத்தீவு மாவட்டத்தைச்  சேர்ந்த 37 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் உறவான குமுதினி அவர்களின் தந்தை அமரர் சோமசுந்தரம் சண்முகநாதன் அவர்களின் திதியினை முன்னிட்டு அவர் வழங்கிய முப்பதாயிரம் ரூபா நிதி உறுதுணையில் முல்லைத்தீவு மாவட்டத்தைச்  சேர்ந்த 37 மாணவர்களுக்கு போசாக்கிற்கான நவதாணிய சத்துமா மற்றும் மைலோ மா பை என்பன வழங்கி வைக்கப்பட்டது.

18.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மோகணராணி அவர்களுக்கு   யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் நாட்டில் வாழும் புலம் பெயர் உறவான திரு திருமதி செல்வன் தம்பதிகளின் புதல்வி சாகிரா அவர்களின் முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் வழங்கி வைக்கப்பட்ட 136000 ரூபா நிதி உதவியில் வீட்டிற்கான மின்சார வேலைகள் மற்றும் கதவு யன்னல் வேலைகள் செய்து கொடுக்கப்பட்டன.

23.12.2020- வன்னி விழிப்புலனற்றோர் சங்க வவுனியா,கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு யாழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலியா நாட்டில் வாழும் புலம் பெயர் உறவான திரு தங்கராசா ஆதித்தன் அவர்களின் 51 வது  பிறந்த நாளை முன்னிட்டு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அவரது நண்பர்களால்  வழங்கி வைக்கப்பட்ட 50000 ரூபா நிதி உதவியில் சீருடைத்துணி மற்றும் புத்தகப்பைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

“முற்று”